1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 5 மே 2026 (19:33 IST)

விபத்தில் சிக்கிய தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி மரணம்!. திரையுலகினர் அதிர்ச்சி..

rb choudhry
நடிகர் ஜீவாவின் தந்தை ஆர்.பி.சவுத்ரி. சூப்பர் குட் பிலிம்ஸ் என்கிற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி பல புதிய இயக்குனர்களை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் இவர்.1990ம் வருடம் விக்ரமன் இயக்குனராக அறிமுகமான புது வசந்தம் இந்த நிறுவனத்தில் முதல் படமாக அமைந்தது.

அதன்பின் தொடர்ந்து பல படங்களையும் தயாரித்ததோடு பல புதிய இயக்குனர்களை அறிமுகம் செய்தார் ஆர்பி சவுத்ரி. இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் விஜய் பல படங்களிலும் நடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பழமொழிகளிலும் கிட்டத்தட்ட 100 படங்களை இந்த நிறுவனம் நெருங்கி விட்டது. நூறாவது படமாக விஜயை வைத்து தயாரிக்க இந்த நிறுவனம் திட்டமிட்டது. ஆனால், அது நடக்கவில்லை.

இந்நிலையில்தான், ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் ஏற்பட்ட வாகன விபத்தில் ஆர்.பி.சவுத்ரி படுகாயமடைந்தார்.இந்நிலையில், அவர் மரணமடைந்துவிட்டதாக தற்போது  அறிவிக்கப்பட்டிருக்கிறது. அவரின் உடல் நாளை சென்னை கொண்டுவரப்படவிருக்கிறது. ஆர்.பி.சவுத்ரியின் மரண செய்தி தமிழ் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.