1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. ravi mohan planning to go to sabarimala

இனிமே முழுக்க ஆன்மீகம்தான்!.. ஆளே மாறிய ரவி மோகன்!.. வைரல் போட்டோ!...

ravi mohan
ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தார். ஆர்த்தி மீது ரவியும், ரவி மீது ஆர்த்தியும் பல புகார்களை கூறினார்கள். நான் கஷ்டப்பட்டு சம்பாதித்த வீட்டில் அவர்கள் வாழ்கிறார்கள்.. எனக்கு சொந்தமாக வங்கி கணக்கு கூட இல்லை.. என்னை கட்டுப்படுத்திக் கொண்டே இருந்தார்கள்.. கை செலவுக்கு கூட பணம் கொடுக்கவில்லை என்றெல்லாம் அடுக்கடுக்கான புகார்களை கூறி அதிர வைத்தார் ரவி மோகன்.

ஒருபக்கம் பாடகி மற்றும் தெரபி மருத்துவர் கெனிஷா என்பவரோடு ரவி மோகன் நெருக்கம் காட்டினார். சமீபத்தில் சைபர் புல்லிங் செய்து தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்டை ஹேக் செய்து தன்னை பற்றி தவறான இமேஜை வெளியே பரப்புவதால் நான் இன்ஸ்டாகிராமில் உள்ளிட்ட எல்லா சமூகவலைதளங்களிளில் இருந்தும் வெளிவருகிறேன்.. அதோடு சென்னை விட்டு செல்கிறேன் என்றும் சொல்லிவிட்டு கெனிஷா சென்று விட்டார்..

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஜெயம் ரவி மனைவி பற்றி பல புகார்களை கூறினார். தனது மகன்களை கூட பார்க்க அனுமதிக்கவில்லை என்றும் அதனால் தான் கையை கூட கிழித்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாகவும் சொல்லி அதிர வைத்தார். நான் சாகவேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். மூன்றெழுத்து இட்லி நடிகை என் வாழ்க்கையை அழித்துவிட்டார். விவாகரத்து பிரச்சனை முடியும்வரை நான் சினிமாவில் நடிக்க மாட்டேன் எனவும் கூறி இயக்குனர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். எனவே, பலரும் ரவி மோகன் மீது அனுதாபப்பட்டனர்.
ravi mohan

இந்நிலையில் ரவிமோகன் தற்போது சபரிமலைக்கு மாலை போட்டிருக்கிறார். 41 நாட்கள் விரதம் இருந்து அவர் சபரிமலைக்கு செல்ல திட்டமிட்டிருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த 41 நாளைக்கு செல்போன் பயன்படுத்தக் கூடாது எனவும் ரவி மோகன் உறுதியெடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.
About Writer
பாலகிருஷ்ணன்
அடுத்த கட்டுரையில்
மாசக்கணக்குல ஷூட்டிங் நடந்தும் இவ்ளோதானா!. அரசன் படம் முடிஞ்ச மாதிரிதான்!...