ரஞ்சித், ரஜினிகாந்த் படத்தில் நாயகியாக ராதிகா ஆப்தே?

Radhika Apte
Suresh| Last Updated: ஞாயிறு, 19 ஜூலை 2015 (15:59 IST)
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்குகிறது. தாணு தயாரிக்கும் இந்தப் படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.

 

 
சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, முரளி ஒளிப்பதிவு செய்கிறார். எடிட்டிங் பிரவீண். பிரகாஷ்ராஜ், கலையரசன் இருவரும் முக்கியமான வேடங்களில்.
 
ஆனால், படத்தின் நாயகி யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. ராதிகா ஆப்தே நடித்தால் சிறப்பாக இருக்கும் என நினைக்கிறார் ரஞ்சித். ஆனால், இன்னும் ராதிகா ஆப்தே நடிப்பது உறுதி செய்யப்படவில்லை.
 
அனுராக் காஷ்யபின் குறும்படம் ஒன்றில் ராதிகா ஆப்தே நிர்வாணமாக சில நொடிகள் தோன்றினார். படம் வெளிவரும் முன்பே இந்தக் காட்சி மட்டும் இணையத்தில் வெளியாகி சர்ச்சையானது. நிர்வாண சர்ச்சையில் மாட்டிய ராதிகா ஆப்தே ரஜினி படத்துக்கு சரிவருவாரா?
 
இன்னும் ஓரிரு தினங்களில் ரஞ்சித் படத்தின் நாயகி யார் என்பது தெரிந்துவிடும்.


இதில் மேலும் படிக்கவும் :