லிங்கா நஷ்டத்துக்கு ரஜினி பொறுப்பல்ல - சரத்குமார்


லெனின் அகத்தியநாடன்| Last Modified வெள்ளி, 16 ஜனவரி 2015 (15:28 IST)
லிங்கா பட நஷ்டத்துக்கு ரஜினி பொறுப்பல்ல என்று நடிகர் சங்கத் தலைவரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான நடிகர் சரத்குமார் கூறினார்.
 
 
காரைக்குடியில் நடந்த பொங்கல் விழாவில் கலந்து கொண்ட அவர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,
 
லிங்கா பட நஷ்டத்துக்கு ரஜினி பொறுப்பல்ல. நடிப்பதுடன் ஒரு நடிகரின் கடமை முடிந்துவிடும். தொழிலில் ஏற்ற இறக்கம் இருந்தால் அது தொழில் செய்வோரையே சாரும் என்றார்.
 
ஆக, லிங்கா நஷ்டம் என்று வெளிப்படையாகவே ஒத்துக் கொண்டிருக்கிறார் நடிகர் சங்கத் தலைவர்.


இதில் மேலும் படிக்கவும் :