ரஜினி எந்த தொகுதியில் நிற்கப் போகிறார்? –உலாவரும் தகவல்!

Last Modified வியாழன், 13 பிப்ரவரி 2020 (09:11 IST)

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்த சட்டமன்றத் தேர்தலில் களமிறங்க உள்ள நிலையில் அவர் எந்த தொகுதியில் நிற்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த வருடம் மே மாதம் நடக்க இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் ரஜினிகாந்தின் புதிதாக ஆரம்பமாகப் போகும் கட்சி நிற்கப்போவது உறுதியாகிவிட்டது. இதற்கானப் பணிகளை ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் செய்து வருகின்றனர்.

அந்த தேர்தலில் ரஜினி எந்த தொகுதியில் நிற்பார் என்ற கேள்வி எழுந்தது. பொதுவாக இதுபோல நடிகர்கள் தேர்தலில் நிற்கும் போது அவர்களுக்கு அதிக ரசிகர்கள் உள்ள பகுதிகளில்தான் போட்டியிடுவர். விஜயகாந்த் தனது முதல் தேர்தலில் விருத்தாசலத்தில் போட்டியிட்டு வென்றார். அதேபோல ரஜினி தனது முதல் தேர்தலில் கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பன்னபள்ளி என்ற தொகுதியில் நிற்க இருக்கிறாராம். மேலும் இந்த தொகுதியில் நிற்பதற்கு மற்றொரு முக்கியக் காரணமும் இருக்கிறது. ரஜினியின் பெற்றோரின் பூர்வீகம் இந்த கிருஷ்ணகிரிதான் என்று சொல்லப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :