1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வியாழன், 4 ஆகஸ்ட் 2016 (10:10 IST)

ரஜினி நடிப்பு கண்ணுலயே நிக்குது - தெலுங்கு சூப்பர் ஸ்டாரின் பாராட்டு

ரஜினி நடிப்பு கண்ணுலயே நிக்குது - தெலுங்கு சூப்பர் ஸ்டாரின் பாராட்டு

கபாலி படத்தில் ரஜினியின் நடிப்பு கண்ணுலயே நிக்குது என்று பாராட்டியிருக்கிறார் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி.


 
 
ரஜினியும், சிரஞ்சீவியும் நல்ல நண்பர்கள். ஆரம்பகாலத்தில் இருவரும் இணைந்தும் நடித்துள்ளனர். கபாலி வெளியானதும், சிரஞ்சீவி கேட்டுக் கொண்டதற்கிணங்க ஹைதராபாத்தில் அவருக்கு சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. பிறகு சில தினங்கள் கழித்து மீண்டும் கபாலி பார்த்துள்ளார். படம் குறித்து பேசிய அவர், ரஜினியை இப்படியொரு கேரக்டரில் பார்க்க ஆச்சரியமாக இருக்கு. 25 வருடங்கள் கழித்து மனைவியை அவர் பார்க்கும் போது அவரது நடிப்பு இப்போதும் கண்ணுக்குள்ளேயே நிக்குது, மீண்டும் கபாலி பார்ப்பேன் என்று அவர் கூறியுள்ளார்.
 
சிரஞ்சீவி நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது 150 -வது படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.