வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: செவ்வாய், 4 நவம்பர் 2014 (08:57 IST)

தல தளபதி சலூன் மாதிரியாம் இந்த ரஜினி முருகன்

பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் சந்தானம் தனது சலூனுக்கு தல தளபதி என்று பெயர் வைத்திருப்பார். சிவ கார்த்திகேயன் நடிக்கும் ரஜினி முருகன் படத்தின் பெயரும் ஏறக்குறைய தல தளபதி போலதான். அதில் சலூன் என்றால் இது டீக்கடை.
 
வருத்தப்படாத வாலிபர் சங்கத்தை இயக்கிய பொன்ராம் மீண்டும் சிவ கார்த்திகேயனை வைத்து இயக்கும் படம்தான் ரஜினி முருகன். திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்ற வாரம் தொடங்கியது. கீர்த்தி சுரேஷ் சிவ கார்த்திகேயனின் ஜோ‌டியாக நடிக்கிறார். ஹீரோவுக்கு இணையான வேடத்தில் சூரி.
 
ரஜினி முருகன் என்ற தங்களின் டீக்கடை திறப்புவிழாவுக்கு சிவ கார்த்திகேயனும், சூரியும் அழைப்பது போன்ற போஸ்டர்கள் முதல்கட்ட படப்பிடிப்பில் இடம்பெற்றன. ரஜினி முருகன் என்பது படத்தில் இவர்கள் நடத்தும் டீக்கடையின் பெயர் என்பது இதன் மூலம் தெரிய வந்துள்ளது.