திருமண மண்டபங்களை தந்து உதவிய ரஜினி, விஜய்


Caston| Last Modified திங்கள், 7 டிசம்பர் 2015 (11:13 IST)
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சினிமா நட்சத்திரங்களின் உதவி தொடர்கிறது. கொட்டும் மழையையும், வெள்ளத்தையும் பொருட்படுத்தாமல் விஷால், சித்தார்த், ஆர்.ஜே.பாலாஜி, மயில்சாமி, பார்த்திபன், குஷ்பு, இமான் அண்ணாச்சி போன்றவர்கள் சென்னைவாசிகளுக்கு உதவிகள் செய்தனர்.

 
 
நடிகர் ரஜினி மற்றும் விஜய் தங்களின் திருமண மண்டபங்களை, நிவாரணப் பொருள்கள் வைப்பதற்காக இலவசமாக தந்துள்ளனர். விஜய்க்கு சொந்தமான திருமண மண்டபம் சாலிக்கிராமத்தில் உள்ளது. அதில் மக்களுக்கான நிவாரணப் பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன. அதேபோல் ரஜினியின் ராகவேந்திரா திருமண மண்டபமும் நிவாரணப் பொருள்கள் வைப்பதற்காக இலவசமாக தரப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :