1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. rajamouli father sharing the story of varanasi movie

ராமர் Vs கும்பகர்ணன் மோதல்!.. வாரணாசி கதை இதுதான்!.. அட அவரே சொல்லிட்டாரே!...

varanasi
பாகுபலி, பாகுபலி 2, RRR போன்ற பேன் இண்டியா திரைப்படங்களை இயக்கி இந்திய சினிமா அளவில் பிரபலமானவர் இயக்குனர் ராஜமௌலி. இதில் பாகுபலி 2 திரைப்படம் உலகளவில் 1500 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. எனவே ராஜமௌலி இந்திய அளவில் கவனிக்கத்தக்க ஒரு இயக்குனராக மாறியிருக்கிறார். 
 
ராஜமவுலி தற்போது மகேஷ்பாபுவை வைத்து வாரணாசி என்கிற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படம் கிட்டத்தட்ட முடியும் நிலைக்கு வந்துவிட்டது. இந்த படம் தொடர்பான கிளிம்ப்ஸ் வீடியோ சில மாதங்களுக்கு முன்பு படக்குழு வெளியிட்டது. அதில் இராமாயண காலத்தில் கதை நடப்பது போல காட்சிகள் இடம் பெற்றிருந்தது..
 
இந்நிலையில் இந்த படத்தின் கதையை எழுதியுள்ள ராஜமவுலியின் அப்பா விஜயேந்திர பிரசாத் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறிய போது ‘ராமர் மற்றும் கும்பகர்ணன் இடையேயான மோதல்தான் வாரணாசி படத்தின் கதை. படத்தின் அறிமுக டிரெய்லரிலேயே ராமர், கும்பகர்ணன், அனுமான் ஆகியோரை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.. படத்தின் கதை பற்றி மேலும் என்னால் பேச முடியாது’ என்று அவர் கூறியிருக்கிறார். எனவே, புராணம், அறிவியல், ஃபேண்டஸி, வரலாறு ஆகியவை கலந்த கலவையாக வாரணாசி உருவாகியிருக்கும் என கணிக்கப்படுகிறது.
 
About Writer
பாலகிருஷ்ணன்
அடுத்த கட்டுரையில்
விஜயகாந்தை அசிங்கமா திட்டினேன்!.. ஆனா அவன்!.. நடிகர் தியாகு ஃபீலிங்!..