தன்னார்வலர்களுக்கு நடிகர் சித்தார்த் அறிவுரை


Suresh| Last Updated: திங்கள், 7 டிசம்பர் 2015 (09:53 IST)
சென்னையில் கொட்டித் தீர்த்த மழையால் சென்னை மாநகரமே தத்தளிக்கிறது. 

 

 
மழை நீர் பல இடங்களில் வடிந்தாலும், மக்களின் துயர் இன்னும் வடியாமலேயே உள்ளது.
 
வெள்ளத்தில் சிக்கியவர்களுக்கு உறுதுணையாகவும், தன்னம்பிக்கையாகவும் அமைந்தது தன்னார்வர்களின் தன்னலமற்ற தொண்டு.
 
உணவு, தண்ணீர், பெண்களுக்கான நாப்கின், பாய், போர்வை என்று அத்தியாவசியமான உதவிகளை வெள்ளத்தில் நீந்திச் சென்று அவர்கள் செய்து வருகின்றனர். அவர்களுக்கு நடிகர் சித்தார்த் அறிவுரை கூறியுள்ளார்.
 
வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யும் தன்னார்வலர்கள் மறக்காமல் டெட்டனஸ் ஊசி போட்டு தங்களை பாதுகாத்துக் கொள்ளும்படி கேட்டிருக்கிறார்.
 
மேலும், புண்கள் வரமால் பார்த்துக் கொள்ளும்படியும் தனது ட்விட்டர் செய்தியில் சித்தார்த் குறிப்பிட்டுள்ளார்.
 
நடிகர் சித்தார்த் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னாலான உதவிகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :