விஜய் ஒரு சின்ன பிள்ளை அவருக்கு எதுவும் தெரியாது: ராதாரவி பரபரப்பு பேட்டி

விஜய் ஒரு சின்ன பிள்ளை அவருக்கு எதுவும் தெரியாது
Last Modified வெள்ளி, 14 பிப்ரவரி 2020 (09:35 IST)
விஜய் ஒரு சின்ன பிள்ளை அவருக்கு எதுவும் தெரியாது
விஜய் ஒரு சின்ன பிள்ளை என்றும் அவருக்கு அரசியல் குறித்து எதுவும் தெரியாது என்றும் ராதாரவி பேட்டி அளித்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கடந்த சில நாட்களாக விஜய்யை குறி வைத்து பாஜகவினர் காய் நகர்த்தி வருவதாகவும் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து அரசியல் கட்சிகள் அவரையும் அவரது ரசிகர்களையும் தூண்டி வருவதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன

இந்த நிலையில் சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடிகர் ராதாரவி பேட்டி ஒன்றில் கூறியபோது விஜய்யின் முதல் படத்திலேயே தான் அப்பாவாக நடித்தவர் என்றும் அவருடைய குணம் கேரக்டர் குறித்து தனக்கு நன்றாக தெரியும் என்றும் அவர் பொதுவாகவே ரொம்ப சாந்தமானவர் என்றும் அவர் ஒரு சின்ன பிள்ளை என்றும், அவருக்கு அரசியல் குறித்து எதுவும் தெரியாது என்றும் கூறினார்

மேலும் விஜய் படத்திற்கு ஏதாவது பிரச்சனை என்றால் நானே முதல் ஆளாக நின்று போராடுவேன் என்றும் அவருக்கு எதிராக பாஜக எந்த போராட்டத்தையும் நடத்தவில்லை என்றும் நெய்வேலியில் நடந்த போராட்டம் கூட சினிமா படப்பிடிப்புகள் அங்கு நடத்தக்கூடாது என்று நடந்த போராட்டம் என்றும் கூறினார். மேலும் விஜய் இதுவரை தான் திமுகவின் ஆதரவாளர் என்றோ பாஜகவின் எதிர்ப்பாளர் என்றோ கூறவில்லை என்றும் சமூக வலைத்தளங்களில் பாஜகவுக்கு எதிரானவர் என்று பொய்யாக வதந்தி பரப்பப்படுவதாகவும் ராதாரவி தனது பேட்டியில் தெரிவித்தார்.


இதில் மேலும் படிக்கவும் :