த்துதா மிகித லகுதா... இது பார்த்திபனின் பீ பீ பாடல்


லெனின் அகத்தியநாடன்| Last Modified ஞாயிறு, 3 ஜனவரி 2016 (13:26 IST)
சூழ்நிலையை அறிந்து அதற்கேற்ப பேசக்கூடியவர் பார்த்திபன் என்பது தமிழர்கள் அறிந்த ரகசியம். சிம்புவின் பீப் பாடல் தமிழக மீடியாக்களை ஆக்கிரமித்திருக்கும் நிலையில் பீ பீ என்று தொடாங்கும் புதிய பீப் பாடல் ஒன்றை யூ டியூபில் வெளியிட்டுள்ளார்.
 
 
மீ அண்ட் யூடியூப் என்ற பெயரில் புதிய யூ டியூப் சேனல் தொடங்கியிருக்கும் பார்த்திபன், அந்த சேனலில் இந்த பீ பீ பாடலை வெளியிட்டுள்ளார். இது முழுக்க வெள்ள பாதிப்பை பற்றியதாகும். பார்த்திபனின் வரிகளுக்கு இசையமைப்பாளர் சத்யா இசையமைத்துள்ளார். சென்னை வெள்ள பாதிப்பின் போது உதவிய தன்னார்வலர்கள் இந்த வீடியோவில் ஆடியுள்ளனர். 
 
மக்களிடையே உள்ள மனிதநேயத்தை வெளிக்கொண்டு வரவே இந்தப் பாடலை உருவாக்கியதாக பார்த்திபன் குறிப்பிட்டார்.

வீடியோ கீழே:

 


இதில் மேலும் படிக்கவும் :