84 கோடி இழப்பீடு வேண்டும்!. தனுஷ் படத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்த தயாரிப்பாளர்!..
பாலிவுட்டில் தனுஷை வைத்து நான்கு திரைப்படங்களை இயக்கியவர் ஆனந்த் எல்.ராய். ஏற்கனவே தனுஷ் மற்றும் கபூரை வைத்து இவர் இயக்கிய ராஞ்சனா திரைப்படம் 2013ம் வருடம் வெளியானது. இந்த படத்தை ஈராஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் இணைந்து தன்னுடைய யெல்லோ மீடியா சார்பில் ஆனந்த் எல்.ராய் தயாரித்திருந்தார்.
இந்நிலையில்தான், அந்த படத்தின் தொடர்ச்சியாக தேரே இஸ்க் மே என்கிற திரைப்படத்தை ஆனந்த்.எல்.ராய் இயக்கியிருந்தார். இந்த படத்தில் கீர்த்தி சனோன், தனுஷ் ஆகியோர் நடித்திருந்தனர். கடந்த வருடம் இந்த படம் வெளியாகி ஓரளவுக்கு நல்ல வசூலையும் பெற்றது.
இந்நிலையில்தான் இந்த படத்தில் ராஞ்சனா படத்தின் கதை மற்றும் கதாபாத்திரங்களை தேரே இஸ்க் மே படத்தில் ஆனந்த் எல்.ராய் பயன்படுத்தியிருப்பதாக ஈராஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறது. அதற்கு ஆதாரமாக படத்தின் போஸ்டர்கள், டீசர், பேட்டிகள் ஆகியவற்றை ஈராஸ் நிறுவனம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.
தங்களுக்கு நஷ்ட ஈடாக 84 கோடியை ஆனந்த் எல்.ராய் கொடுக்க வேண்டும் என புகார் மனுவில் கூறப்பட்டிருக்கிறது இந்த மனு நாளை விசாரணைக்கு வரவிருக்கிறது.