பி.வி. சிந்துவின் தீவிர ரசிகனாக மாறிய ரஜினிகாந்த்

பி.வி. சிந்துவின் தீவிர ரசிகனாக மாறிய ரஜினிகாந்த்


Sasikala| Last Updated: வெள்ளி, 2 செப்டம்பர் 2016 (16:54 IST)
ரியோ ஒலிம்பிக்கில் மகளிருக்கான பாட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து இறுதிப்போட்டியில் ஸ்பெயின் வீராங்கனையிடம் போராடி தோல்வியடைந்தார்.

 


2-வது இடம் பிடித்த சிந்து வெள்ளி பதக்கம் வென்று புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
 
ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற தங்க மங்கை பி.வி.சிந்துவிற்கு நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒலிம்பிக் அரங்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த அவருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்தவண்ணம் உள்ளன.
 
இந்நிலையில், ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற தங்க மங்கை பி.வி.சிந்துவிற்கு நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 
‘ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி. சிந்துவிற்கு எனது வாழ்த்துக்கள். நான் உங்களின் தீவிர ரசிகனாகவே மாறிவிட்டேன்.’
 
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :