ஓட்டுப் போட்டால் சினிமா டிக்கெட் இலவசம்

ஓட்டுப் போட்டால் சினிமா டிக்கெட் இலவசம்


Sasikala| Last Modified புதன், 11 மே 2016 (18:14 IST)
டைமிங் விளம்பரங்களில் நம்மாள்கள் கில்லாடிகள். கோ 2 படம் மே 13 வெளியாகிறது.

 


பாபி சிம்ஹா நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தை பிரமோட் செய்யும் விதமாக புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
 
மே 16 நடக்கும் சட்டமன்ற தேர்தலில் வாக்களித்தவர்கள், விரல் மையுடன் ஒரு செல்பி எடுத்து 8682888038 என்ற எண்ணுக்கு அனுப்பினால் அவர்களுக்கு கோ 2 படத்துக்கான இரண்டு டிக்கெட்டுகள் இலவசமாக அனுப்பி வைக்கப்படும். 100 சதவீத வாக்குப் பதிவுக்காக இந்த சலுகையை அறிவித்திருப்பதாக தயாரிப்பு தரப்பு கூறுகிறது.
 
கூறுகெட்ட சிலரோ, படத்தை ஓட வைக்க தயாரிப்பாளர் எடுத்த அதிரடி திட்டம் இது என்று சொல்கிறார்கள்.
 
நீங்க என்ன நினைக்கிறீங்க...?
 


இதில் மேலும் படிக்கவும் :