1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Suresh
Last Updated : வெள்ளி, 11 செப்டம்பர் 2015 (10:45 IST)

புனே திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு ஆதரவாக வித்யாபாலன் கையெழுத்து

புனே திரைப்படக் கல்லூரியிலும் மோடி அரசு தனது காவி முகத்தை காட்டியுள்ளது.


 

 
ஷ்யாம் பெனகல், அடூர் கோபாலகிருஷ்ணன், மிருணாள் சென், க்ரீஷ் கர்னாட், யு.ஆர். அனந்தமூர்த்தி போன்ற உலக அளவில் கொண்டாடப்படும் இந்திய திரைப்பட மேதைகளே இதுவரை இந்த கல்லூரியின் தலைவர்களாக இருந்தனர்.
 
இந்திலையில், புதிய தலைவராக பாரதீய ஜனதாவை சேர்ந்தவரும், டி.வி சீரியல் நடிகருமான கஜேந்திர சவுகானை மத்திய அரசு நியமித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பல்வேறு முறைகேடுகளை முன்னிட்டும் மாணவர்கள் கடந்த சில மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 
இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக பாலிவுட் நடிகை வித்யா பாலனும் பிரபல திரைக்கதை எழுத்தாளர் அஞ்சும் ராஜபலியும் மாணவர்கள் சார்பாக, குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு எழுதப்பட்ட கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
 
இந்தக் கடிதத்தில், குடியரசு தலைவர் இதில் தலையிட்டு பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்றும் தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டிலிருந்து திரைப்படக் கல்லூரியை விடுவித்து அதை தன்னாட்சி நிறுவனமாக மாற்ற வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
 
வித்யா பாலன், அஞ்சும் ராஜபலி தவிர மேலும் 190 இயக்குனர்களும் மாணவர்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.