புலிவாலை கைவிட்ட சந்தானம்

Sasikala| Last Modified வியாழன், 27 அக்டோபர் 2016 (17:53 IST)
செல்வராகவன், கண்ணா லட்டு தின்ன ஆசையா மணிகண்டன், சேதுராமன், பச்சையப்பன் ராஜா.... இவர்கள் எல்லாம் சந்தானத்தை வைத்து படம் பண்ண வரிசையில் நிற்பவர்கள். இதில் பச்சையப்பன் ராஜா கதையில் இம்ப்ரசாகி படத்தில் நடிக்க சந்தானம் சம்மதித்திருந்தார்.

 
பச்சையப்பன் கதையில் சந்தானத்துடன் பிரதானமாக ஒரு புலியும் வருகிறது. புலியை கிராபிக்ஸில் உருவாக்கலாம் என்று தீர்மானித்து பூர்வாங்க வேலையை ஆரம்பித்திருக்கிறார்கள்.
 
இந்நிலையில், பச்சையப்பனின் படமும் வேண்டாம், புலியும் வேண்டாம் என்று தீர்மானித்துள்ளார் சந்தானம். ஏன்...? முதலில் கதை கேட்ட போது ஓகேவாக இருந்ததாம். தில்லுக்கு துட்டு வெற்றிக்குப் பிறகு கதை கேட்ட போது கதை பிடிக்காமல் போயிருக்கிறது. அதனால், நோ சொல்லி ரிவர்ஸ் அடித்திருக்கிறார்.


இதில் மேலும் படிக்கவும் :