வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வியாழன், 13 ஆகஸ்ட் 2015 (21:22 IST)

புலி ட்ரெய்லர் வெளியீட்டு தேதி அறிவிப்பு

விஜய் நடித்துள்ள புலி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளனர்.
 

 
சிம்புதேவன் இயக்கத்தில் ஃபேண்டஸியாக உருவாகியுள்ளது, புலி. விஜய், ஸ்ருதி, ஹன்சிகா, சுதீப், ஸ்ரீதேவி முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இதன் டீசர் விஜய்யின் பிறந்த நாளில் வெளியானது. சமீபத்தில் பாடல்களை வெளியிட்டனர்.
 
படத்தின் ட்ரெய்லரை ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியிடயிருப்பதாக அறிவித்துள்ளனர். படம் விநாயகர் சதுர்த்தி அன்று திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.