வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 31 ஆகஸ்ட் 2015 (19:32 IST)

புலி தெலுங்கு பாடல் வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு

விஜய்க்கு ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் சிறிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அதனால், அவர் நடிக்கும் படங்கள் பெரும்பாலும் தெலுங்கிலும் வெளியாகும். சமீபத்தில் ஜில்லா படத்தை தெலுங்கில் வெளியிட்டனர். திரையிட்டவர்களுக்கு படம் லாபத்தை சம்பாதித்து தந்தது.
 

 
ஜில்லா படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யலாம் என்று நினைத்ததால், அதனை தெலுங்கில் டப் செய்யாமல் காலதாமதம் செய்தனர். புலிக்கு அப்படியொரு பிரச்சனையே இல்லை. பாகுபலி, ருத்ரம்மாதேவி என்று சரித்திரப் படங்கள் எடுக்கும் ஊரில் புலியை தெலுங்கில் வெளியிடுவதே பெரிது. ரீமேக்கிற்கு வாய்ப்பேயில்லை.
 
முதல்கட்டமாக தெலுங்குப் பதிப்பின் ஆடியோவை செப்டம்பர் 6 -ஆம் தேதி ஹைதராபாத்தில் பிரமாண்டமாக வெளியிடுகின்றனர். புலியின் தெலுங்குப் பதிப்பை  எஸ்.வி.ஆர்.மீடியா என்ற நிறுவனம் வாங்கியுள்ளது.