புலி படத்தின் சிறப்புக் காட்சிகள் திடீர் ரத்து - குழப்பத்தில் ரசிகர்கள்

Puli
Suresh| Last Updated: வியாழன், 1 அக்டோபர் 2015 (09:06 IST)
புலி படம் இன்று வெளியாகவிருந்த நிலையில், அதிகாலை ஐந்து மணி மற்றும் எட்டு மணி சிறப்புக் காட்சிகள் திடீரென ரத்து செய்யப்பட்டன.

 

 
அதனால், புலி இன்று வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
 
அதிக பொருட்செலவில் பிரமாண்டமாக எடுக்கப்பட்ட சரித்திரப் படம் என்பதால், புலி படத்தைப் பார்க்க விஜய் ரசிகர்கள் வழக்கத்தைவிட அதிக ஆர்வத்துடன் இருந்தனர்.
 
கட்அவுட்கள், போஸ்டர்கள் என்று தமிழகமெங்கும் கொண்டாட்டங்கள் சூடுபிடித்த நிலையில், இன்று அதிகாலை திரையிடுவதாக இருந்த 5 மணி சிறப்புக் காட்சிகள் திடீரென ரத்து செய்யப்பட்டன.
 
நேற்றிரவு திரையரங்குகளுக்கு வந்த உத்தரவைத் தொடர்ந்து அதிகாலை ஐந்து மணிக் காட்சி ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
 
அதனைத் தொடர்ந்து காலை எட்டுமணி காட்சியும் சில திரையரங்குகளில் ரத்து செய்யப்பட்டது. ஏன் புலி திரையிடல் ரத்து செய்யப்பட்டது என்பது தெரியாத நிலையில், இன்று படம் திட்டமிட்டபடி வெளியாகுமா என்ற குழப்பம் ரசிகர்களிடையே நிலவுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :