1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: திங்கள், 28 நவம்பர் 2016 (17:34 IST)

ஏவிஎம் தயாரிக்கும் படத்தில் கமல்?

ஏவிஎம் தயாரிக்கும் படத்தில் கமல் நடிக்க உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. மௌலி இயக்கத்தில் கமல் ஒரு படம் நடிக்கவிருப்பதாக பல மாதங்களாக கூறப்பட்டு வருகிறது. கடைசியில் இந்தப் படம் குறித்து ஒரு முடிவுக்கு கமல் வந்துள்ளார்.

 
நகைச்சுவையை மையப்படுத்தி தயாராகும் இந்தப் படத்தை ஏவிஎம் தயாரிக்க உள்ளதாகவும், படத்துக்கு மெய்யப்பன் என்று பெயர் வைக்கப்பட உள்ளதாகவும் உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றனர். அடுத்த மாதம் முதல் கமல் சபாஷ் நாயுடு படவேலைகளை தொடங்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.