வியாழன், 13 நவம்பர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 18 அக்டோபர் 2025 (09:08 IST)

பிரியங்கா மோகன் நடிக்கும் ‘Made in Korea’... கதைக்களம் பற்றி வெளியான தகவல்!

பிரியங்கா மோகன் நடிக்கும் ‘Made in Korea’... கதைக்களம் பற்றி வெளியான தகவல்!
சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார் பிரியங்கா மோகன். அந்த படத்தின் வெற்றிக்கு அவரின் துறுதுறுப்பான நடிப்பும் ஒரு முக்கியக் காரணமாக அமைந்தது. அந்த படத்தில் அவரின் நடிப்பால் கவரப்பட்ட சிவகார்த்திகேயன் தன்னுடைய அடுத்த படமான டான் படத்திலும் வாய்ப்புக் கொடுத்தார். அதே சூர்யாவின் எதற்கு துணிந்தவன் படத்திலும் நடித்தார்.

சமீபத்தில் இவர் நடித்த கேப்டன் மில்லர் மற்றும் பிரதர் ஆகிய படங்கள் பெரிய வெற்றியைப் பெறவில்லை. அதனால் அவருக்கும் பெரிய வாய்ப்புகள் அமையவில்லை. இந்நிலையில் தற்போது அவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் ‘made in korea’ என்ற வெப் தொடரில் நடித்து முடித்துள்ளார். இந்த தொடரை ‘நித்தம் ஒரு வானம்’ படத்தை இயக்கிய ரா கார்த்திக் இயக்கியுள்ளார்.

இந்த தொடரின் பெரும்பாலானக் காட்சிகள் கொரியாவில் படமாக்கப்பட்டுள்ளன. தனது காதலனுடன் கொரியாவுக்கு சுற்றுலா செல்லும் கதாநாயகி அங்கு எதிர்கொள்ளும் தனிமையுணர்வு மற்றும் அதுசார்ந்த பிரச்சனைகளேக் கதைக்களம் என சொல்லப்படுகிறது. சமீபகாலமாக கொரியன் சீரிஸ்கள் தமிழ்நாட்டில் இளைஞர்கள் மத்தியில் பெரியளவில் ஆதரவைப் பெற்று வருகின்றன. அந்த வகையில் இந்த சீரிஸ் இந்தியா மற்றும் கொரியா கூட்டுப் படைப்பாக உருவாகிறது. நெட்பிளிக்ஸ் நிறுவனத்துக்காக  Rise East Entertainment நிறுவனம் இந்த சீரிஸை தயாரிக்கிறது.