1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. preethi mukundan may acts in dhanush 56 movie

மமிதாவும் இல்ல.. சஞ்சனாவும் இல்ல!.. தனுஷின் புதிய படத்தில் அந்த நடிகை!...

d55
கோலிவுட்டில் முக்கிய நடிகராக வலம் வருபவர் தனுஷ். மற்ற நடிகர்கள் போல இடைவெளி விடாமல் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார் தனுஷ். நடிப்பதோடு மட்டுமில்லாமல் ஒருபக்கம் திரைப்படங்களையும் அவர் இயக்கி வருகிறார். திரையுலகில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பல அவதாரங்களையும் தனுஷ் எடுத்திருக்கிறார்.

இதுவரை நடிப்புக்காக இரண்டு தேசிய விருதுகளை தனுஷ் பெற்றிருக்கிறார். அவர் நடித்து வெளியான கர திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் தற்போது அமரன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ‘ஓம்’  திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு ‘லப்பர் பந்து’ பட இயக்குனர் தமிழரசன் பச்சைமுத்து இயக்கத்தில் தனுஷ் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.  இது அவரின் 56வது திரைப்படம் ஆகும்..

இந்த படத்தில் கதாநாயகியாக மமித பைஜூவை நடிக்க வைக்கலாம் என இயக்குனரிடம் தனுஷ் பரிந்துரை செய்ததாக செய்திகள் வெளியானது. ஆனால் இயக்குனரோ லப்பர் பந்து படத்தில் நடித்த சஞ்சனா கிருஷ்ணமூர்த்தியையே நடிக்க வைக்கலாம் என நினைத்தாராம்.

தற்போது அவர்கள் இரண்டு பேருமே இல்லை எனவும் பிளாஸ்ட் மற்றும் இதயம் முரளி ஆகிய படங்களில் நடித்த ப்ரீத்தி முகுந்தனிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக செய்திகள் கசிந்திருக்கிறது. அவர் நடித்த இரண்டு படங்களும் சூப்பர் ஹிட் என்பதால் அவரே இந்த படத்தில் நடிக்க அதிக வாய்ப்பிருப்பதாக பார்க்கப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
படத்தை உடனே ரிலீஸ் பண்ணுங்க!.. ஹெச்.வினோத் பண்ண சம்பவம்!..