வெள்ளி, 14 நவம்பர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வியாழன், 9 அக்டோபர் 2025 (11:48 IST)

தீபாவளிக்கு வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் ‘டியூட்’.. டிரைலர் ரிலீஸ்..!

தீபாவளிக்கு வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் ‘டியூட்’.. டிரைலர் ரிலீஸ்..!
நடிகரும் இயக்குநருமான பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படமான 'டியூட்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகி, ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
பிரதீப் ரங்கநாதனுடன், இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இணைந்து உருவாக்கியுள்ள இந்த படத்தில், மலையாளத்தில் பிரபலமடைந்த நடிகை மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.
 
முன்னதாக, இந்த படத்தின் முதல் பாடலான ‘ஊறும் பிளட்’ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. இந்நிலையில், இன்று வெளியான டிரைலரில் இடம்பெற்றுள்ள காதல் காட்சிகள் படத்தின் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளன.
 
'டியூட்' திரைப்படம் வரும் அக்டோபர் 17 அன்று தீபாவளி வெளியீடாகத்திரையரங்குகளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது..
 
 
Edited by Mahendran