பவர் பாண்டிகளை வாழ்த்திய செல்வராகவன்

பவர் பாண்டிகளை வாழ்த்திய செல்வராகவன்

Sasikala| Last Modified புதன், 5 அக்டோபர் 2016 (16:07 IST)
பவர் பாண்டி படத்தின் மூலம் இயக்குனராகியிருக்கிறார் தனுஷ். ராஜ்கிரண்தான் இந்தப் படத்தின் நாயகன்.

 
தனுஷின் சொந்த தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு சீன் ரோல்டன் இசையமைத்து வருகிறார். வெற்றிமாறன் இயக்கி வரும் 'வடசென்னை' படப்பிடிப்பின் இடைவெளிக்கு நடுவே 'பவர் பாண்டி' படத்தை தனுஷ் இயக்கி வருகிறார்.  
 
பவர் பாண்டி படத்தின் காட்சிகளைப் பார்த்த தனுஷின் அண்ணன் செல்வராகவன், பவர் பாண்டி காட்சிகளைப் பார்த்து அசந்துவிட்டேன். வேடிக்கையாகவும், நெகழ்ச்சியாகவும் காட்சிகள் இருந்தன. தனுஷ், ராஜ்கிரண் இருவர் குறித்தும் பெருமைப்படுகிறேன் என்று ட்விட்டரில் வாழ்த்தியிருந்தார். 
 
அதற்கு தனுஷ், ரொம்ப நன்றி செல்வா. சந்தோஷமாகவும், சிலிர்ப்பாகவும் உள்ளது. எல்லா புகழும் உங்களுக்கே என்று பதிலளித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :