பொன்னியின் செல்வன்…. விரைவில் சூப்பர் அப்டேட்!

Last Modified செவ்வாய், 14 செப்டம்பர் 2021 (10:13 IST)

பொன்னியின் செல்வன் படத்தின் மேக்கிங் வீடியோவை விரைவில் படக்குழு வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மணிரத்னத்தின் கனவுப் படமான பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று இறுதிக் கட்டத்தை எட்டி வருகிறது. இரு பாகங்களாக உருவாகும் இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா. பிரகாஷ்ராஜ். ஜெயராம். சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவடைந்து விட்டதாக செய்திகள் வெளியானது.

ஆனால் இதுவரை படத்தின் போஸ்டர் மட்டுமே வெளியாகியுள்ளது. இன்னும் நடிகர்களின் கதாபாத்திர அறிமுகம் கூட வெளியிடப்படவில்லை. இந்நிலையில் ரசிகர்களிடம் எதிர்பாரப்பை ஏற்படுத்தும் விதமாக விரைவில் மேக்கிங் வீடியோவை வெளியிட தயாரிப்பாளரும் இயக்குனருமான மணிரத்னம் முடிவு செய்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :