தொடர்புடைய செய்திகள்
- மஞ்சுமெல் பாய்ஸ் இயக்குனரின் புதிய படம் பாலன்!.. வெளியான டிரெய்லர் வீடியோ!..
- மஞ்சுமெல் பாய்ஸ் இயக்குனர் மீது பாலியல் புகார்!.. போலீசார் வழக்குபதிவு!..
- 'மஞ்சும்மல் பாய்ஸ்' பட இயக்குநரின் அடுத்த படைப்பு: 'பாலன்' படப்பிடிப்பு நிறைவு!
- மஞ்சும்மெள் பாய்ஸ் விவகாரம்… நடிகர் சவுபின் சாஹிர் வெளிநாடு செல்ல தடை!
- ‘மஞ்சும்மள் பாய்ஸ்’ இயக்குனர் சிதம்பரத்தின் அடுத்த பட தலைப்பு அறிவிப்பு!
லாபத்தில் 40 சதவீதம் தருவதாக மோசடி!. மஞ்சுமெல் பாய்ஸ் தயாரிப்பாளர் மீது குற்றப்பத்திரிக்கை!..
சிதம்பரம் என்பவர் இயக்கத்தில் 2024ம் வருடம் பிப்ரவரி மாதம் வெளியான திரைப்படம் மஞ்சுமெல் பாய்ஸ். இந்த படம் மலையாளத்தில் உருவாகியிருந்தாலும் தமிழ்நாட்டில் வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்களையும் கவர்ந்தது. இதன் காரணமாக இந்த படம் தமிழ்நாட்டிலும் சூப்பர் ஹிட் அடித்தது..
கேரளாவை சேர்ந்த சில இளைஞர்கள் கொடைக்கானலில் உள்ள குணா குகையை பார்க்க செல்வார்கள். அப்போது அங்கு ஒருவர் தவறி கீழே விழுந்து விட நண்பர்கள் அவரை எப்படி மீட்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை. குணா படத்தில் இடம்பெற்ற கண்மணி அன்போடு காதலன் பாடலை படத்தின் இறுதி காட்சியில் பயன்படுத்தியிருந்தார்கள். படத்தின் வெற்றிக்கு அது முக்கிய காரணமாக அமைந்தது.
சுமார் 20 கோடி பட்ஜெட்டில் உருவான மஞ்சுமெல் பாஸ் திரைப்படம் 230 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இந்நிலையில்தான், படத்தின் இலாபத்தில் தனக்கு 40 சதவீத பங்கு தருவதாக கூறி தயாரிப்பாளர்கள் தன்னை மோசடி செய்து விட்டதாக சிராஜ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் மஞ்சுமெல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் மீது 1000 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது..
இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த சௌபின் ஷாகிரும் இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கூலி படத்திலும் வில்லனாக நடித்திருந்தார்.
