அஜித்துடன் கார் ரேஸில் நீங்களும் போக வேண்டுமா?!.. அதிரடி அறிவிப்பு...
அஜித் சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி அவ்வப்போது கார் ரேஸ்களிலும் கலந்துகொண்டு வருகிறார். துபாயில் துவங்கி கார் ரேஸ் இப்போது வரை நின்றபாடில்லை.துபாயை தொடர்ந்து பல நாடுகளிலும் நடந்த கார் ரேஸில் அவர் கலந்துகொண்டார். இப்போது மலேசியாவில் நடந்துவரும் கார் ரேஸில் அவரின் டீம் விளையாடி வருகிறது.
இந்நிலையில், அஜித்துடன் கார் ரேஸில் பயணிக்க பொதுமக்களுக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அஜித் அடுத்து துபாயில் நடக்கவுள்ள கார் ரேஸில் கலந்துகொள்ளவிருக்கிறார். அவருடன் யாரேனும் பயணிக்க விரும்பினால் துபாய் பணத்தில் 3800 திர்ஹாம்ஸ் செலுத்த வேண்டும். அதாவது இந்திய பண மதிப்பில் 86 ஆயிரத்து 500 ரூபாய் செலுத்த வேண்டும்.
Ride with Ak என இதற்கு பெயர் வைத்திருக்கிறார்கள். இதில் சேர்ந்துகொள்ள மக்கள் ajithkumarracing.com என்கிற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம். இது தொடர்பான தகவலுக்கு
[email protected] என்கிற மின்னஞ்சலையும் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதன் மூலம் அஜித்தை அருகில் பார்க்கவும், அவருடன் பேசவும், அவரின் ரேஸ் காரில் பயணிக்கவும் ரசிகர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.