1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. peddy movie two days collection report

Peddi: பாக்ஸ் ஆபிசில் வசூலை அள்ளும் பெத்தி!.. 2 நாளில் இவ்வளவு கோடியா?!...

peddi
தெலுங்கு சினிமாவில் முக்கிய இளம் நடிகராக வலம் வருபவர் ராம்சரண். இவர் தெலுங்கு சினிமா மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகன். ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆருடன் இணைந்து இவர் நடித்து வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் தெலுங்கு, தமிழ் மலையாளம், ஹிந்தி ஆகிய எல்லா மொழிகளிலும் வெளியாகி வசூலை அள்ளியது.
 
இந்நிலையில்தான், புச்சி பாபு என்பவர் இயக்கத்தில் ராம்சரண் பெத்தி என்கிற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் கடந்த 4ம் தேதி பேன் இண்டியா படமாக உலகமெங்கும் வெளியானது.
 
இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்திருகிறார். இந்த படம் ராம்சரணுக்கு ஒரு வெற்றிப்படமாக அமைந்திருக்கிறது. படம் வெளியாகி இரண்டு நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இந்த படம் 150.49 கோடி வசூல் செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. இதில் வெளிநாட்டில் மட்டும் Peddi திரைப்படம் 36 கோடி வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.
 
அடுத்த கட்டுரையில்
பாக்ஸ் ஆபீஸில் பரிமளா அண்ட் கோ : முதல் நாள் வசூல் நிலவரம்