தொடர்புடைய செய்திகள்
- பெத்தி படம் மீதான சர்ச்சை!.. மன்னிப்பு கேட்ட இயக்குனர்!...
- Peddi: பாக்ஸ் ஆபிசில் வசூலை அள்ளும் பெத்தி!.. 2 நாளில் இவ்வளவு கோடியா?!...
- ஒரு நாளைக்கு 4 லட்சம்!.. ராம் சரணின் பாடிகார்ட் யார் தெரியுமா?...
- விஜய்யின் ஸ்டைல்தான் தயாரிப்பாளர்களுக்கு ஜாக்பாட்… ஆனால் யாரும் பின்பற்றுவதில்லை- தில் ராஜு கருத்து!
- கேம்சேஞ்சர் படுதோல்வி… மீண்டும் இணையும் தில் ராஜு & ராம்சரண்!
Peddi: வசூலை வாரிக்குவிக்கும் பெத்தி!.. 5 நாள் கலெக்ஷன் ரிப்போர்ட் இதோ!...
தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவர் ராம் சரண். ராஜமவுலி இயக்கத்தில் உருவான ஆர்.ஆர்.ஆர் படத்திலும் நடித்திருந்தார். அந்த திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு ஆஸ்கர் விருதும் கிடைத்தது. இந்நிலையில்தான், புச்சி பாபு என்பவர் இயக்கத்தில் பெத்தி என்கிற படத்தில் ராம் சரண் நடித்தார்.
இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடித்திருந்தார். மேலும் சிவ்ராஜ்குமார், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். கடந்த 4ம் தேதி இந்த படம் உலகமெங்கும் வெளியானது. தமிழ் தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் இந்த படம் வெளியானது..
இந்த படம் தொடர்ந்து நல்ல வசூலை பெற்று வருகிறது. அதேநேரம் இந்த படத்தில் பெண் கதாபாத்திரத்தை காட்டிய விதம் சரியில்லை, மிகவும் ஆபாசமாக இருப்பதோடு பெண்களை இழிவுபடுத்துவது போல காட்சிகள் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தது. இதற்கு இயக்குனர் மன்னிப்பு கேட்டார். அதோடு தேவையான மாற்றங்களை படத்தில் செய்யப்படும் எனவும் கூறியிருந்தார்.
அதேநேரம், இந்த விமர்சனத்தை தாண்டியும் பெத்தி திரைப்படம் நல்ல வசூலை பெற்று வருகிறது. படம் வெளியாக 5 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 248.92 கோடி வசூல் செய்திருப்பதாக sacnilk இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
