1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. peddy direcotr apologies for crictics

பெத்தி படம் மீதான சர்ச்சை!.. மன்னிப்பு கேட்ட இயக்குனர்!...

peddi
தெலுங்கு நடிகர் ராம் சரண் நடித்து உருவாகியிருக்கும் திரைப்படம் பெத்தி. இந்த திரைப்படத்தை புஜ்ஜு பாபு என்பவர் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் கதாநாயகியாக ஜான்வி கபூர் நடித்திருக்கிறார். இந்த படம் கடந்த 4ம் தேதி உலகமெங்கும் வெளியானது.
 
இந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வசூலை அள்ளி வருகிறது. படம் வெளியாகி 2 நாட்கள் ஆனநிலையில், உலகமெங்கும் 150 கோடிக்கும் மேல் இந்த படம் வசூல் செய்து விட்டது. அதேநேரம் இந்த படத்தின் கதாநாயகி ஜான்வி கபூர் தொடர்பான காட்சிகளில் ஆபாசம் அதிகமாக இருப்பதாகவும், கதாநாயகிகளை தெலுங்கு சினிமா மோசமாக சித்தரிப்பதகவும் பலரும் சமூக வலை தினங்களில் பதிவிட்டனர்,,
 
இந்நிலையில், இது தொடர்பாக தனது சமூகவலை தினங்களில் பதிவிட்டுள்ள இயக்குனர் புஜ்ஜி பாபு ‘பெத்தி படத்தின் சில காட்சிகள் தொடர்பாக வந்த விமர்சனங்களை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டிருக்கிறோம். பெண்களுக்கு திரையிலும் திரைக்கு வெளியிலும் எப்போதும் மரியாதை வைத்துள்ளேன்.

எந்த பெண் கதாபாத்திரத்தையும் அவமதிக்கும் எண்ணம் எனக்கு இல்லை. யாருடைய உணவுகளையும் புண் படுத்தியிருந்தால் மனதார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். விமர்சனங்களை தொடர்ந்து தேவையான பகுதிகளில் மாற்றங்கள் செய்யப்படும்’ என அவர் கூறியிருக்கிறார்.
About Writer
பாலகிருஷ்ணன்
அடுத்த கட்டுரையில்
ஊரை விட்டு போறேன்!.. அதுதான் நிம்மதி!.. விஜய் ஆண்டனி ஷாக்!...