அந்த கேள்வியைக் கேட்டு துருவ்வின் சினிமா வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து விடாதீர்கள்… பசுபதி ஆதங்கம்!
பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் மற்றும் வாழை ஆகிய படங்களை அடுத்து மாரி செல்வராஜின் ஐந்தாவது படமாக பைசன்நேற்று ரிலீஸானது. இந்த படத்தில் துருவ் விக்ரம்மோடு அனுபமா பரமேஸ்வரன், பசுபதி, ரஜிஷா விஜயன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்லாஸ் எண்டர்டெயின்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் ஒன்றிணைந்து இந்த படத்தைத் தயாரித்துள்ளனர்.
இந்த படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி ரிலீஸாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது. ஐந்து நாட்களில் உலகளவில் சுமார் 35 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தொடர்ந்து இரண்டாவது வாரத்தில் வெற்றிகரமாக ஓடிவரும் பைசன் படத்துக்கு வெவ்வேறு தளங்களில் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இதையடுத்து படத்தின் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடந்தது. அப்போது பேசிய நடிகர் பசுபதி “விக்ரம் மற்றும் துருவ்வுடன் இணைந்து நடித்தது பற்றிக் கேட்கிறார்கள். தயவு செய்து அதுபோன்ற கேள்விகளைக் கேட்காதீர்கள். இருவரின் வாழ்க்கையும் வேறு. துருவ் இப்போதுதான் தொடங்கியுள்ளார். அவர் முன்னால் இதுபோன்ற சுமையை வைத்து அவர் சினிமா வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடாதீர்கள்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.