புதன், 18 பிப்ரவரி 2026
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By BALA
Last Modified: செவ்வாய், 3 பிப்ரவரி 2026 (16:50 IST)

நான் அத மன்னிக்கவே மாட்டேன்! திவ்யா குறித்து அணுகுண்டாக வெடித்த பார்வதி

நான் அத மன்னிக்கவே மாட்டேன்! திவ்யா குறித்து அணுகுண்டாக வெடித்த பார்வதி
நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி ரசிகர்களிடம் நல்ல ஒரு வரவேற்பை பெற்றது. இந்த சீசன் தொடங்கிய முதல் ஒரு மாதம் மக்கள் வேண்டாம் வெறுப்பாக தான் இதை பார்த்து வந்தனர். முந்தைய சீசன்களை போல ஆரம்பத்தில் இந்த சீசன் மக்களை கவரவில்லை என்பதுதான் உண்மை. உள்ளே வந்த போட்டியாளர்களும் ஏன் வந்தார்கள் எதற்காக வந்தார்கள் என்று தெரியாமல் விளையாடிக் கொண்டிருக்கிறார்களே என கலவையான விமர்சனங்கள் இந்த சீசன் மீது இருந்து வந்தது.
 
அதன் பிறகு தான் வைல்ட் கார்டு போட்டியாளர்களாக நான்கு பேர் வந்த நிலையில் நிகழ்ச்சி சூடு பிடிக்க ஆரம்பித்தது. இன்னொரு பக்கம் கம்ருதீன் மற்றும் பார்வதி இடையிலான அந்த கெமிஸ்ட்ரி லவ் இவையும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. இதற்கு எல்லாம் மேலாக பார்வதி மற்ற போட்டியாளர்களுடன் சண்டை போடும் விதம் மேலும் இந்த நிகழ்ச்சிக்கு பெரும் ஹைப்பை உருவாக்கிக் கொடுத்தது.
 
ஆனால் இடையில் பார்வதி மற்றும் கம்ருதீன் இவர்களின் நடவடிக்கை ரசிகர்களை முகம் சுழிக்கவும் வைத்தது. ஒரு கட்டத்தில் சாண்ட்ராவை கம்ருதீன் மற்றும் பார்வதி இருவரும் சேர்ந்து கார் டாஸ்க்கில் எட்டி உதைத்து கீழே தள்ளியது ரசிகர்களின் வெறுப்புக்கு ஆளாகவும் நேர்ந்தது. இதன் பிறகு தான் பார்வதி மற்றும் கம்ருதீன் ஆகிய இருவருக்கும் ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள்.
 
அப்போது பார்வதி அவரது உடைமைகளை எல்லாம் பேக் செய்துவிட்டு கேட் அருகில் சில மணி நிமிடங்கள் நின்ற நிலையில் எந்த போட்டியாளர்களும் அவரை வழி அனுப்ப வரவில்லை. அவரே வீட்டை விட்டு வெளியேறினார். அதற்கு முன் திவ்யா கம்ருதீனை பார்த்து வெளியே போன பிறகு இவளுடன் சகவாசம் வைத்துக் கொள்ளாதே. இவளுடன் சேராதே என்றெல்லாம் கடுமையான வார்த்தைகளை பேசி இருந்தார்.
 
அதை நான் மன்னிக்கவும் மாட்டேன் மறக்கவும் மாட்டேன். என்னால் அவர் பல வகைகளில் பாதிக்கப்பட்டு இருக்கலாம். ஆனால் ஒரு பெண்ணாக இன்னொரு பெண்ணுக்கு நான் எந்த ஒரு கெடுதலும் செய்ய மாட்டேன். ஆனால் திவ்யா அந்த மாதிரி பேசியது என்னால் மறக்கவே முடியாது என்று ஒரு பேட்டியில் திவ்யா குறித்து பார்வதி பேசியுள்ளார்.