‘பீரியட் என்னை விடுங்கள்’ என்று கத்தினேன்!.. தனுஷ் பட அனுபவம் சொன்ன பார்வதி!...
மலையாளத்தில் பல படங்களில் நடித்தவர் பார்வதி. தமிழில் சொல்லாமலே சசி இயக்கிய பூ திரைப்படம் மூலம் அறிமுகமானார். அந்த படத்திலேயே தான் ஒரு சிறந்த நடிகை என்பதை நிரூபித்தார். மலையாளத்தில் சில படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருது வாங்கியவர் இவர். தமிழில் மிகவும் குறைவான திரைப்படங்களில் மட்டுமே பார்வதி நடித்திருக்கிறார்.. அதில் தனுசுடன் நடித்த மரியான் திரைப்படமும் ஒன்று.
பரத் பாலா இயக்கிய இந்த திரைப்படம் 2013ம் வருடம் வெளியானது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். பாடல்கள் ஹிட் ஆனாலும் படம் சுமாரான வெற்றியை மட்டுமே பெற்றது. இந்த படத்திலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் பார்வதி.. மேலும் தனது அழகால் ரசிகர்களை கவர்ந்தார். ஆனால் இந்த படத்தில் தனக்கு ஏற்பட்ட ஒரு கசப்பான அனுபவம் பற்றி பார்வதி சொன்ன தகவல் பலரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
மரியான் படத்தில் ஒரு காதல் காட்சியில் தண்ணீரில் நனைந்தபடி நடித்தேன். என்னிடம் வேறு உடையும் இல்லை.. உடையை மாற்ற வேண்டும் என்பதால் ஹோட்டலுக்கு செல்ல வேண்டும் என கேட்டேன்.. ஆனால் படக்குழு என்னை அனுமதிக்கவில்லை.. எனக்கு பீரியட்.. கண்டிப்பாக ஓட்டலுக்கு செல்ல வேண்டும் என்று சத்தமாக கத்தினேன்.. படப்பிடிப்பு தளத்தில் எல்லோரும் ஆண்களாக இருக்க அங்கு மூன்று பெண்கள் மட்டுமே இருந்தார்கள்.. என் தேவைகளை பூர்த்தி செய்யவும், எனக்கு ஆதரவாக நிற்கவும் அங்கு யாருமே இல்லை என பேசியிருக்கிறார்