1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. parthiban says lokesh will be highly paid actor

அதிக சம்பளம் வாங்கும் ஆக்சன் ஹீரோ லோகேஷ் கனகராஜ்!.. பார்த்திபன் டிவிட்...

parthiban
மாநகரம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி கைதி, விக்ரம், மாஸ்டர் போன்ற படங்கள் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

விஜயை வைத்து மாஸ்டர், லியோ, ரஜினியை வைத்து கூலி ஆகிய படங்களை இயக்கினார். இந்த இரண்டு திரைப்படங்களும் கலவையான விமர்சனங்களை பெற்றதால் அவர் அடுத்த படம் தாமதமாகி வருகிறது. புஷ்பா பட ஹீரோ அல்லு அர்ஜுனை வைத்து விரைவில் ஒரு படத்தை இயக்கவிருக்கிறார்.

இந்நிலையில்தான் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள டிசி திரைப்படத்தில் கதையின் நாயகனாக லோகேஷ் கனகராஜ் நடித்திருக்கிறார். கடந்த வெள்ளிக்கிழமை இந்த திரைப்படம் வெளியானது. இந்நிலையில், இந்த படத்தை இயக்குனர் மற்றும் நடிகர் பார்த்திபன் பாராட்டி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

கடலில் சுனாமியாக காற்றில் சூறாவளியாக வெயிலில் அக்கினியாக மழையில் இடியுடன் கூடிய அதிரடி அட்டகாசம்..

ஏற்கனவே வர்த்தக இயக்குனர் இப்போது வெற்றி நாயகனாக களம் கொண்டிருக்கும் லோகேஷ் கனகராஜ் அதிக சம்பளம் வாங்கும் ஒரு ஆக்சன் ஹீரோவாக வலம் வருவார்.. விரல்களில் பிளாஸ்டிக் ரோஸ், இதழ்களில் உண்மையான ரோஸ் சுமக்கும் புது கதா நாயகி’ என பதிவிட்டிருக்கிறார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
ஷங்கருடன் இணையும் அஜித்!.. இது செம அப்டேட்!..