1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: புதன், 11 மார்ச் 2015 (08:08 IST)

24 வருடங்களுக்குப் பிறகு என் ராசாவின் மனசிலே இரண்டாம் பாகம்

பலவகைகளில் என் ராசாவின் மனசிலே திரைப்படம் முக்கியமானது. தயாரிப்பாளராக இருந்த ராஜ்கிரண் இந்தப் படத்தில்தான் ஹீரோவானார். இளையராஜாவின் இசை உச்சம் தொட்டப் படங்களில் இதுவும் ஒன்று. வடிவேலுக்கும் முதல் அடையாளமாக இந்தப் படம் அமைந்தது. ஏன், மீனாவுக்கும் இதுதான் திருப்புமுனை படம்.
 

கஸ்தூரிராஜா இயக்கிய என் ராசாவின் மனசிலே படத்தில் ராஜ்கிரண் மாயாண்டியாகவும், மீனா சோலையம்மாவாகவும் நடித்திருந்தனர். படத்தில் இருவரும் இறந்துவிடுவதைப் போன்று கதை அமைக்கப்பட்டிருந்தது. ஒருவேளை அவர்கள் இறந்து போகாமலிருந்தால்...? இப்போது அவர்கள் எப்படி இருப்பார்கள்...?

இந்த சுவாரஸியமான கேள்வியை வைத்து இரண்டம்பாகத்தை எடுக்க திட்டமிட்டுள்ளார் ராஜ்கிரண். இந்த இரண்டாவது பாகத்தில் அவர் மாயாண்டியாக நடிக்க மீனாவையே சோலையம்மாவாக நடிக்க கேட்கயிருக்கிறார். இசை, வேறு யார் இளையராஜாதான். படத்தை இயக்குகிற பொறுப்பை மட்டும் கஸ்தூரிராஜாவுக்கு தர ராஜ்கிரணுக்கு விருப்பமில்லை. அவரே இயக்குவார் என தெரிகிறது.