1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. parimala and co movie 2nd day collection report

பரிமளா அண்ட் கோ 2வது நாள் வசூல்: பாக்ஸ் ஆபீஸில் மாஸ் காட்டும் ஜெயராம் - ஊர்வசி கூட்டணி!

பரிமளா அண்ட் கோ
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில், முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஜூன் 5, 2026 அன்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் பரிமளா அண்ட் கோ. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் திரையுலகின் முன்னணி மூத்த கலைஞர்களான ஜெயராம் மற்றும் ஊர்வசி மீண்டும் இணைந்து நடித்துள்ள இந்தத் திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
 
ஒரு குடும்பத்தில் நடக்கும் விசித்திரமான கொலைச் சம்பவத்தை மையமாகக் கொண்டு, டார்க் காமெடி பாணியில் விறுவிறுப்பாகவும் நகைச்சுவையாகவும் நகரும் இந்தத் திரைப்படம், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.திரைப்படங்களின் பாக்ஸ் ஆபீஸ் வசூலைத் துல்லியமாகக் கணிக்கும் முன்னணி இணையதளமான Sacnilk வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலின்படி,பரிமளா அண்ட் கோ திரைப்படம் முதல் நாளை விட இரண்டாம் நாளில் மிக பலத்த வசூல் வேட்டையை நடத்தியுள்ளது. சனிக்கிழமை வார இறுதி விடுமுறை நாள் என்பதால், திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதியது. இதன் காரணமாக, முதல் நாள் வசூலை விட இரண்டாம் நாளில் வசூல் கணிசமாக அதிகரித்துள்ளது.
 
மொத்த காட்சிகள்  1,222 காட்சிகள்2ஆம் நாள் இந்திய நெட் வசூல் (Day 2 Net)ரூ. 1.92 கோடி (சுமார் 20% உயர்வு)இதுவரை மொத்த நெட் வசூல் ரூ. 3.52 கோடி இதுவரை மொத்த கிராஸ் வசூல் ரூ. 4.05 கோடி வசூல் ஆகியுள்ளது.
 
ட்ரிஷ்யம்  பாணி கதைக்களத்தில் ஒரு வித்தியாசமான நகைச்சுவை ட்விஸ்ட்  என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பாசிட்டிவ் விமர்சனங்களை பகிர்ந்து வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமையான இன்றும்  படத்திற்கான புக்கிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால், படத்தின் 3 நாள் வசூல் இன்னும் பிரம்மாண்டமாக இருக்கும் என வர்த்தக நிபுணர்கள் கணித்துள்ளனர்.
About Writer
பாலகிருஷ்ணன்