பாண்டிராஜின் நம்பிக்கையும் நயன்தாராவின் நமட்டு சிரிப்பும்


Sasikala| Last Modified செவ்வாய், 19 ஜனவரி 2016 (13:54 IST)
இது நம்ம ஆளு படம் பிப்ரவரி 12 காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்று ஒரு ஆரூடம் இருந்தது. அதனை அப்படத்தின் இயக்குனர் பாண்டிராஜே நொறுக்கினார்.

 

 


பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், பிப்ரவரி கடைசியில் அல்லது மார்ச் தொடக்கத்தில் இது நம்ம ஆளு வெளிவரும் என்றார்.
 
இந்த சந்திப்பின் போது, இது நம்ம ஆளு படத்தின் பிரமோஷனுக்கு நயன்தாரா வருவாரா என கேட்கப்பட்டது. தெலுங்கு அனாமிகா படத்தின் பிரமோஷனில் நயன்தாரா கலந்து கொள்ளாததால் அவரை தெலுங்கு திரையுலகம் ஒதுக்கி வைத்ததும், நீங்க என்னை ஒதுக்கிறது இருக்கட்டும், நானே உங்களை ஒதுக்கி வைக்கிறேன் என தெலுங்குப் படங்களை நயன்தாரா முற்றாக ஒதுக்கியதும் வரலாறு. எந்தப் படமாக இருந்தாலும் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில்லை என்பது அவரது பாலிஸி.
 
அதனை தெரிந்து கொண்டே, பாண்டிராஜ், நயன்தாரா கண்டிப்பாக வருவார். சிம்புடன் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் நயன்தாராவும் கலந்து கொள்வார் என்றார் உறுதியாக.

தான் நடிக்கும் படங்களின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை என்ற பாலிஸியில் நயன்தாரா பொம்பள அஜித். பாண்டிராஜின் கமெண்டுக்கு நயன்தாராவின் உதடு நமட்டு சிரிப்பு சிரித்திருக்கும்.


இதில் மேலும் படிக்கவும் :