புதிய தொடரில் இணையும் பாண்டியன் ஸ்டார் ஜோடி.. ஆச்சரிய தகவல்..!
விஜய் டிவியின் மெகா ஹிட் தொடரான 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீசன் 2-ல் தந்தை மற்றும் தாய் கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர்கள் ஸ்டாலின் மற்றும் நிரோஷா ஜோடி.
முதல் பாகத்தில் ஸ்டாலினுக்கு ஜோடியாக சுஜிதா நடித்து பாராட்டுகளை பெற்றிருந்தாலும், இரண்டாம் பாகத்தில் நிரோஷா தனது எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். இவர்களின் நேர்த்தியான நடிப்பு மற்றும் திரை கெமிஸ்ட்ரி காரணமாக இத்தொடர் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில், ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி தரும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடருக்கு பிறகு, ஸ்டாலின் மற்றும் நிரோஷா மீண்டும் ஒரு புதிய மெகா தொடரில் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். இந்த புதிய சீரியலும் விஜய் டிவியிலேயே ஒளிபரப்பாக உள்ளது.
குறிப்பாக, இது பிற்பகல் நேரத்தில் இல்லத்தரசிகளை கவரும் வகையில் ஒளிபரப்பப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தொடர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, தலைப்பு மற்றும் இதர நட்சத்திரங்கள் குறித்த விபரங்கள் இன்னும் சில நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மீண்டும் இந்த ஹிட் ஜோடியை சின்னத்திரையில் காண ரசிகர்கள் இப்போதே ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
Edited by Siva