1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: சனி, 18 ஜூலை 2015 (16:19 IST)

செப்டம்பர் 4 திரைக்கு வரும் பாயும் புலி

சுசீந்திரன் இயக்கத்தில் விஷால், காஜல் அகர்வால் நடித்துள்ள பாயும் புலி செப்டம்பர் 4 -ஆம் தேதி திரைக்கு வருகிறது. இதனை விஷால் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
 

 
வேந்தர் மூவிஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக விஷால் நடித்துள்ளார். இமான் இசையமைத்துள்ளார். சில தினங்கள் முன்பு சிலுக்கு மரமே என்ற பாடலை மட்டும் வெளியிட்டனர்.
 
ஆகஸ்டில் படத்தின் பிற பாடல்களை வெளியிட்டு செப்டம்பர் 4 படத்தை வெளியிட முடிவு செய்திருப்பதாக விஷால் அறிவித்தார்.