தொடர்புடைய செய்திகள்
- வெறும் ரூ. 299-க்கு நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் சந்தாவா? உங்கள் வங்கி கணக்கு காலியாகலாம்! எச்சரிக்கை பதிவு
- 'துரந்தர்' ஓடிடியில் ரிலீஸ்.. ஆனால் 14 நிமிடங்களை கட் செய்தது நெட்பிளிக்ஸ்.. என்ன காரணம்?
- படப்பிடிப்பு தொடங்கும் முன்பே நெட்பிளிக்ஸ் வாங்கிய தனுஷ் படம்.. எத்தனை கோடி?
- சென்சார் சர்டிபிகேட் வருவது போல் தெரியவில்லை.. நேரடியாக ஓடிடி ரிலீஸ்? அமேசானா? நெட்பிளிக்ஸா?
- தனுஷை ரூ.1 கோடி வித்தியாசத்தில் முந்திய சிவகார்த்திகேயன்.. கொண்டாடும் ரசிகர்கள்..!
ப்ளீஸ் வாங்கிக்கோங்க!.. போனி ஆகாத வாரணாசி!.. ராஜமவுலி படத்துக்கே இந்த நிலைமையா?!...
பாகுபலி திரைப்படம் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் ராஜமௌலி. அதுவும் பாகுபலி 2 திரைப்படம் உலகமெங்கும் 1500 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. அதேபோல் அடுத்த வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படமும் சூப்பர் ஹிட் அடித்தது. தற்போது மகேஷ் பாபுவை வைத்து வாரணாசி என்கிற திரைப்படத்தை ராஜமவுலி இயக்கி வருகிறார்.
படம் கிட்டத்தட்ட முடியும் நிலைக்கு வந்துவிட்டது. இந்நிலையில்தான், தயாரிப்பாளருக்கு ஒரு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இந்த படம் துவங்கிய போது ஓடிடி வியாபாரம் உச்சத்தில் இருந்தது. ஆனால் அதன்பின் அந்த வியாபாரம் படுத்துவிட்டது. நெட்பிளிக்ஸ், அமேசான் போன்றா நிறுவனங்கள் புதிய படங்களை மிகவும் குறைவான விலைக்கு மட்டுமே வாங்குகிறார்கள்..
வாரணாசி படத்தை பொறுத்தவரை நெட்பிளிக்ஸ் நிறுவனத்துடன் பேசி வருகிறார்கள். ஆனால் அவர்கள் சொல்லும் தொகைக்கு வாங்க நெட்பிளிக்ஸ் நிறுவனம் மறுத்துவிட்டது. அதோட மும்பையில் உள்ள தலைமை அலுவலக அதிகாரிகள் இதற்கு மேல் எங்களால் விலையை நிர்ணயிக்க முடியாது என்று சொல்ல பட குழு லண்டனில் உள்ள நெட்பிளிக்ஸ் தலைமைக்கு அலுவலகத்து சென்றுவிட்டனர்.
இந்த விலைக்கு படத்தை வாங்கிக் கொள்ளுங்கள் என்று பேரம் பேசி வருகிறார்களாம். ஆனால் தற்போது வரை வாரணாசி படத்தின் ஓடிடி வியாபாரம் பேசி முடிக்கப்படவில்லை என சொல்லப்படுகிறது
. தயாரிப்பாளர் சொல்லும் விலைக்கு ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் வாங்கினால்தான் இந்த படம் தயாரிப்பாளருக்கு ஒரு லாபகரமான படமாக அமையும் என சினிமா வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
