1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: செவ்வாய், 4 ஆகஸ்ட் 2015 (10:15 IST)

வெளிநாடுகளில் சகலகலா வல்லவன், ஆரஞ்சு மிட்டாய் படங்களின் வசூல் நிலவரம்

ரஜினி, கமல், மணிரத்னம், ஷங்கர் போன்றவர்களின் படங்கள் மட்டுமே வெளிநாடுகளில் வெளியாகும், வசூல் செய்யும் என்ற நிலைமை மாறிவிட்டது. சின்னப் படங்களும் வெளிநாடுகளில் வெளியாகி டாலர்களையும் பவுண்ட்களையும் அள்ளுகின்றன. 
சென்ற வாரம் வெளியான ஆரஞ்சு மிட்டாய் யுஎஸ்ஸில் முதல் மூன்று தினங்களில் 16 திரையிடல்களில் 6.45 லட்சங்களை வசூலித்துள்ளது. சகலகலா வல்லவன் இங்கு முதல் மூன்று தினங்களில் 4 திரையிடல்களில் எழுபதாயிரம் ரூபாயை வசூலித்துள்ளது.
 
யுகே மற்றும் அயர்லாந்தில் சகலகலா வல்லவன் முதல் மூன்று தினங்களில் 13 திரையிடல்களில் 11.06 லட்சங்களை வசூலித்துள்ளது. ஆரஞ்சு மிட்டாய் இங்கு 4 திரையிடல்களில் 2.78 லட்சங்களை தனதாக்கியுள்ளது.
 
ஆஸ்திரேலியாவில் சகலகலா வல்லவன் முதல் மூன்று தினங்களில் 4 திரையிடல்களில் 6.78 லட்சங்களை வசூலித்துள்ளது. மலேசியாவில் இப்படம் 31 திரையிடல்களில் 31.32 லட்சங்களை தனதாக்கியுள்ளது.