தொடர்புடைய செய்திகள்
- இளையராஜா பக்கம் போகும் இளம் இயக்குனர்கள்!.. கம்பேக் இசைஞானி!...
- எந்த ஹீரோவும் சிக்கலயே!.. யார வச்சி படமெடுக்க?!.. நொந்துபோன வெங்கட்பிரபு!...
- மாரி செல்வராஜ் - இளையராஜா இணையும் மஞ்சணத்தி- வெளியானது பர்ட்ஸ் லுக் போஸ்டர்
- சாய் அபயங்கருக்கும் காரை பரிசளித்த சூர்யா!.. ஆர்.ஜே.பாலாஜிக்கு என்ன?...
- கருப்பு சூப்பர் ஹிட்!.. ஒளிப்பதிவாளருக்கு சூர்யா கொடுத்த சூப்பர் கிஃப்ட்!..
10 கோடி பட்ஜெட்!. 1400 கோடி வசூல்!.. ரசிகர்களை கவர்ந்த OBSESSION பேய் படம்...
ஹாலிவுட்டில் கர்ரி பார்கர் என்கிற 26 வயதான யூடியூபர் பத்து கோடிக்கும் குறைவான செலவில் எடுத்த ஹாரர் திரைப்படமான Obsession திரைப்படம் 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது.
தன்னுடன் பழகும் பெண்ணிடம் காதலை சொல்ல முடியாமல் தவிக்கும் ஹீரோ மாந்த்ரீக பொருட்கள் விற்கும் ஒரு கடைக்கு சென்று அங்கு ONE WISH WILLOW எனும் ஸ்டிக் போன்ற ஒரு பொருளை வாங்குகிறார். அந்த குச்சியை உடைத்து என்ன வரம் கேட்டாலும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஆனால் ஒரு முறைதான் கேட்க வேண்டும். கதாநாயகன் நான் விரும்பும் பெண் என்னை மட்டுமே காதலிக்க வேண்டும் என்று வரம் கேட்க அது எப்படி அவருக்கு சாபமாக மாறுகிறது என்பதுதான் படத்தின் கதை..
வெறும் 10 கோடிக்கும் குறைவான செலவில் தயாரிக்கப்பட்ட இந்த அமானுஷ்ய திரில்லர் திரைப்படம் உலகெங்கும் 1400 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. அதாவது பட்ஜெட்டை விட 140 மடங்கு வசூலை கொடுத்திருக்கிறது. இந்த படம் இந்தியாவில் மட்டும் 362 தியேட்டர்களில் வெளியிடப்பட்டு 9 கோடி வரை வசூல் செய்திருக்கிறது.
அடுத்த கட்டுரையில்
