1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. obsession movie collected more than two thousand crores

10 கோடிக்கும் குறைவான பட்ஜெட்!.. 2 ஆயிரம் கோடி வசூல் செய்த Obsession திரைப்படம்!..

obsession
கரி பார்க்கர் என்கிற யுடியூபர் இயக்கத்தில் 10 கோடிக்கும் குறைவான பட்ஜெட்டில் உருவான Obsession என்கிற திரைப்படம் கடந்த மே மாதம் 29ம் தேதி உலகமெங்கும் வெளியானது. இந்த படத்திற்கு ரசிகர்களிடம் பெரிய ஆதரவு கிடைத்துள்ளது. குறிப்பாக ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைத்தளங்களில் இந்த படம் நன்றாக இருப்பதாக பலரும் சொல்ல இந்த படத்திற்கு வசூல் அதிகரித்தது.
 
நினைப்பதை நிறைவேற்றும் ஒரு மர்ம பொருளிடம் ஒருதலையாக தான் விரும்பும் பெண் தன்னை மட்டுமே காதலிக்க வேண்டும்.. தன்னோடு மட்டுமே இருக்க வேண்டும் என ஒரு இளைஞன் வரம் கேட்க அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.
 
இந்நிலையில் Obsession திரைப்படம் உலகமெங்கும் இதுவரை 2 ஆயிரம் கோடிக்கும் மேல் வசூல் செய்து கொடுத்திருக்கிறது. அதாவது செலவு செய்ததை விட 200 மடங்கு அதிக வசூலை இந்த படம் தயாரிப்பாளருக்கு கொடுத்துள்ளது. இந்த திரைப்படம் இந்தியாவில் மட்டும் 42 கோடி வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.
About Writer
பாலகிருஷ்ணன்
அடுத்த கட்டுரையில்
ராமர் Vs கும்பகர்ணன் மோதல்!.. வாரணாசி கதை இதுதான்!.. அட அவரே சொல்லிட்டாரே!...