வெள்ளி, 14 நவம்பர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth K
Last Modified: செவ்வாய், 22 ஜூலை 2025 (12:51 IST)

ஒரு படம் கூட ரிலீஸ் ஆகல! சாய் அபயங்கருக்கு குவியும் பட வாய்ப்புகள் எதனால்? - சாம் சி எஸ் ஓபன் டாக்!

Sam CS

தமிழ் சினிமாவில் சமீபமாக அதிகம் பேசப்பட்டு வருவது சாய் அபயங்கருக்கு குவிந்து வரும் பட வாய்ப்புகள் குறித்ததுதான். 

 

பிரபல பாடகர்கள் திப்பு, ஹரிணியின் மகன் சாய் அபயங்கர். இவர் அனிருத் உள்ளிட்ட பல பிரபல இசையமைப்பாளர்களின் குழுவில் பணியாற்றி வருவதுடன், சமீபமாக கட்சி சேர, சித்திர புத்திரி என சில ஆல்பம் பாடல்களை வெளியிட்டார். அவை அனைத்தும் பெரும் வைரல் ஆன நிலையில் அடுத்தடுத்து பல படங்களில் இசையமைப்பாளராக புக் ஆகி வருகிறார். அவையும் சிறிய படங்கள் அல்ல.. பென்ஸ், கருப்பு, டூட், சிம்பு 49 என அனைத்தும் பெரிய ஹீரோக்கள் படங்கள்.

 

இத்தனைக்கும் அவரது இசையமைப்பில் ஒரு படம் கூட இன்னமும் வெளியாகவில்லை. இது சினிமா ரசிகர்கள் வட்டாரத்தில் பேசுப்பொருளாகியுள்ளது. சாய் அபயங்கரின் பின்புலம்தான் அவருக்கு இத்தனை படங்கள் கிடைக்க காரணம் என பலரும் பேசிக் கொள்கின்றனர்.

 

இந்நிலையில் இதுகுறித்து பேசிய இசையமைப்பாளர் சாம் சிஎஸ் “சாய் அபயங்கர் ஒரு நல்ல இசையமைப்பாளர். அவருடைய திறமை என்ன என்பது எனக்கு தெரியும், படத்திற்கு புக் பண்ணிய இயக்குனர்களுக்கு தெரியும். ஆடியன்ஸுக்கு ஏன் தெரியவில்லை என்றால் அவர்கள் இன்னமும் அவரது திறமையை பார்க்கவில்லை. அவர் வொர்க் பிடித்துதான் இயக்குனர்கள் கமிட் செய்கிறார்கள். 

 

மேலும் நான் சாய் அபயங்கருக்கு எதிராக சிலரை வைத்து பதிவிட்டு பிஆர் வொர்க் செய்வதாக சிலர் பேசுவதாக கேள்விப்பட்டேன். அதை நான் தான் செய்தேன் என்று அவர்களால் நிரூபிக்க முடிந்தால் நான் சினிமாவை விட்டு விலகி விடுகிறேன்” என்றும் பேசியுள்ளார்.

 

Edit by Prasanth.K