1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. no block ticket will be sold for jananayagan movie

ஜனநாயகன் ரிலீஸானாலும் லாபம் இல்ல!.. தியேட்டர் அதிபர்கள் அப்செட்!..

jananayagan
விஜயின் ஜனநாயகன் திரைப்படம் ஒருவழியாக விரைவில் வெளியாகவுள்ளது. ஏனெனில் இந்த படத்திற்கு ஏ சான்றிதழ் கொடுக்கப் போகிறோம் என ஏற்கனவே தணிக்கை வாரியம் சொல்லிவிட்டது. அதோடு தணிக்கை வாரியம் சொன்ன சில மாற்றங்களை படக்குழு செய்து வருகிறது.. எனவே, இன்னும் சில நாட்கள் இந்த படத்திற்கு சான்றிதழ் கொடுக்கப்படும் என தெரிகிறது. எனவே வரும் 23 அல்லது 31 ஆகிய இரண்டு தேதிகளில் ஏதேனும் ஒன்றில் ஜனநாயகன் திரைப்படம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..

இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது. இதற்கிடையில் வழக்கமாக விஜய் படம் வெளியாகும் போது முதல் காட்சி ரசிகர்களுக்கு ஒதுக்கப்படும். அந்த பகுதி மாவட்ட நிர்வாகி மொத்த டிக்கெட்டுகளையும் தியேட்டர் நிர்வாகத்திடமிருந்து வாங்கி அதிக விலைக்கு விற்பார்.

ஆனால் ஜனநாயகன் படத்திற்கு அப்படி செய்யக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறதாம்.. அதோடு டிக்கெட் கவுண்ட்டரிலும் அரசு சொன்ன விலையில் மட்டுமே டிக்கெட்டை விற்க வேண்டும் என தயாரிப்பாளர் தரப்பில் கறாராக சொல்லப்பட்டிருக்கிறதாம்.

ஏனெனில் ஜனநாயகன் பட ஹீரோ விஜய் முதலமைச்சர் ஆகிவிட்டதால் இது அவருக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் என்பதால் இந்த நடவடிக்கை என சொல்லப்படுகிறது. அதேநேரம், இதன் காரணமாக ஜனநாயகன் படத்தால் தியேட்டர் அதிபர்களுக்கு லாபம் கிடைக்காது என சொல்லப்படுகிறது..
About Writer
பாலகிருஷ்ணன்