1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 25 நவம்பர் 2025 (18:04 IST)

பைசன் இசையமைப்பாளரை ஹீரோவாக்கும் பா ரஞ்சித்!

பைசன் இசையமைப்பாளரை ஹீரோவாக்கும் பா ரஞ்சித்!
தமிழ் சினிமாவில் எத்தனையோ ஹிட் பாடல்களைக் கொடுத்திருந்தாலும் சமீபத்தில் ரிலீஸாகி பெருவெற்றி பெற்றுள்ள ‘பைசன்’ பட பாடல்கள்தான் நிவாஸ் கே பிரசன்னவை புகழ் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளன. ‘பைசன்’ படத்தின் வெற்றிக்கு அவரின் பின்னணி இசையும் பாடல்களும் பெரும்பங்காற்றியுள்ளன.

இதையடுத்து அவர் அடுத்தடுத்து முன்னணி இயக்குனர்கள் மற்றும் நடிகர்களின் படங்களில் பணிபுரியும் வாய்ப்பைப் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்போது அவரும் அரிதாரம் பூசி நடிகராக மாறவுள்ளார். ஜடா மற்றும் பறை ஆகிய படங்களை இயக்கிய குமரன் இயக்கும் புதிய படத்தில் அவர் நடிகராக அறிமுகமாகவுள்ளார்.

இந்த படத்தில் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராக இயக்குனர் பா ரஞ்சித்தும் இணைந்துள்ளார். விரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.