நிவின் பாலியின் ”குட் டச், பேட் டச்”: வைரலாகும் சமூக விழிப்புணர்வு வீடியோ!!


Sugapriya Prakash| Last Modified புதன், 26 ஏப்ரல் 2017 (12:46 IST)
மலையாள நடிகர் நிவின் பாலி நடிப்பில் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த விழிப்புணர்வு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 
 
கேரள குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ள வீடியோவில் ”குட் டச் பேட் டச்” வித்தியாசங்களை நிவின் பாலி கற்பிக்கிறார். NO.GO.TELL என்ற பெயரில் மலையாளத்தில் இந்த வீடியோ வெளியாகியுள்ளது. 
 
இதில் குழந்தைகள் தங்களது அந்தரங்க பகுதிகளில் தவறாக ஒருவர் தொட்டால் அதற்கு எப்படி விரைந்து செயல்பட வேண்டும் என நிவின் பாலி விளக்கியுள்ளார்.
 
இதற்கு சமூக வலைத்தளங்களில் பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
 


இதில் மேலும் படிக்கவும் :