தொடர்புடைய செய்திகள்
- ஜான்வி கபூரின் ஓவர் கிளாமர் காட்சிகள்.. மன்னிப்பு கேட்ட ‘பெத்தி’ பட இயக்குனர்...
- Peddi: ராம்சரணின் ‘பெத்தி’ திரைப்படம் எப்படி இருக்கு?!.. டிவிட்டர் விமர்சனம்!..
- தேசிய விருது வாங்கும்போது என் நகங்களில் மாட்டு சாணம் ஒட்டியிருந்தது- நித்யா மேனன் நெகிழ்ச்சி!
- Peddi: வசூலை வாரிக்குவிக்கும் பெத்தி!.. 5 நாள் கலெக்ஷன் ரிப்போர்ட் இதோ!...
- அஜித் போடும் கண்டிஷன்!.. தெறிச்சி ஓடும் புரடியூசர்ஸ்!.. புது படத்துக்கு சிக்கல்!..
கவர்ச்சியா நடிக்க மாட்டேன்னு நடிகை சொல்லணும்!.. பெத்தி சர்ச்சைக்கு நித்யா மேனன் கருத்து!..
பெரும்பாலான திரைப்படங்களில் நடிகையை கவர்ச்சி காட்டுவதற்காகவே பயன்படுத்துவது என்பது தற்போது அதிகரித்து விட்டது. அதிலும் தெலுங்கு படங்களில் சொல்லவே தேவையில்லை. கவர்ச்சி பாடலுக்காகவே நடிகையின் கதாபாத்திரத்தை வைத்திருப்பார்கள். சமீபத்தில் புச்சி பாபு என்பவரை இயக்கத்தில் ராம்சரண் நடித்து வெளியான பெத்தி திரைப்படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நடித்திருந்தார்.
படத்தில் இவர் வரும் காட்சிகள் எல்லாவற்றிலும் ஆபாசம் அதிக அளவு இருந்ததாகவும், சினிமாவில் பெண்களை வெறும் கவர்ச்சி பொம்மையாக மட்டுமே இயக்குனர்கள் பயன்படுத்துகிறார்கள் எனவும் பலரும் சமூக வலைதளங்களில் விமர்சிக்க துவங்கினர். இந்த விமர்சனத்தை ஏற்றுக் கொண்ட அந்த படத்தில் இயக்குனர் புச்சி பாபு அதற்கு மன்னிப்பு கேட்டதோடு சில காட்சிகளை நீக்குகிறோம் எனவும் கூறியிருந்தார்..
இந்நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்த நடிகை நித்யா மேனன் சினிமா ரொம்ப வணிகமயமானதால் கதாநாயகிகளை கவர்ச்சி பொம்மை மாதிரி காட்டுறாங்க.. நடிகைகள் தங்களுக்கு ஒரு எல்லை வச்சுக்கணும்.. பிடிக்காத காட்சிகளில் நடிக்க மாட்டேன்னு தைரியமா சொல்லணும்.. ஒருத்தரை வெறும் காட்சி பொருளா மட்டும் காட்டுற மாதிரி இருந்தா நடிக்க முடியாதுன்னு சொல்லணும் என கூறியிருக்கிறார்,
அடுத்த கட்டுரையில்
