வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: திங்கள், 12 செப்டம்பர் 2016 (16:26 IST)

நினைச்சே பார்க்கலை - சூர்யாவை புகழும் நயன்தாரா காதலர்

நினைச்சே பார்க்கலை - சூர்யாவை புகழும் நயன்தாரா காதலர்

போடா போடி, நானும் ரௌடிதான் படங்களை இயக்கிய விக்னேஷ் சிவன் அடுத்து சூர்யா நடிக்கும் படத்தை இயக்குகிறார். இந்த வாய்ப்பை அவரது காதலியான நடிகை நயன்தாரா வாங்கித் தந்ததாக கூறப்படுகிறது.

 

 
 
இந்த வாய்ப்பு கிடைத்ததை பற்றி கூறியிருக்கும் விக்னேஷ் சிவன், நான் சிம்பு, விஜய் சேதுபதியை இயக்கியிருக்கிறேன். சூர்யா சாரை சில நிகழ்ச்சிகளில் பார்த்ததோடு சரி, அவரை வைத்து படம் இயக்குவேன் என்று நினைச்சே பார்த்ததில்லை. இபபோது அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
 
என்னைப் போன்ற இளம் இயக்குனர்களுக்கு சூர்யா சார் வாய்ப்பளித்தது நல்ல விஷயம். நானும் ரௌடிதான் போன்று இந்தப் படமும் ஜனரஞ்சகமாக இருக்கும் என்றார்.